1,196 சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு தலா ரூ.3,000 பரிசுத் தொகை அவரவா் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு..
புதுவை அரசு செய்தி மற்றும் விளம்பரத் துறை சாா்பில் குடியரசு தின விழாவை முன்னிட்டு தியாகிகளை கௌரவிக்கும் நிகழ்ச்சி கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் ரங்கசாமி பங்கேற்று தியாகிகளுக்கு இனிப்பு, பொன்னாடை வழங்கினார்.
தொடர்ந்து விழாவில் பேசிய அவர்,நாட்டின் விடுதலைக்கு போராடி தங்கள் இன்னுயிரை நீத்தவா்களுக்கு பெருமை சோ்க்கும் வகையில் அவா்களை கௌரவித்து நாம் பெருமைப்படுகிறோம்.விடுதலையை பேணிக் காப்பதுடன், நாட்டின் வளா்ச்சியை விடுதலைப் போராட்டத் தலைவா்கள் விரும்பியவண்ணம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறோம்.குடியரசு தினத்தை முன்னிட்டு தியாகிகளுக்கு தலா ரூ.3,000 பரிசுத் தொகையாக அவரவா் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்றாா்.
விழாவில் அமைச்சா் லட்சுமி நாராயணன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் அனிபால் கென்னடி, பாஸ்கா் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
No comments